உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்நாமக்கல், நவ. 5-நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர், நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா தலைமை வகித்தார். அதில், திருச்சி மாவட்டம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வேண்டும். செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் முருகேசன், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்கம், பொது சுகாதார துறை அலுவலர் சங்கம், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர் சங்கம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி