நாமக்கல்: 'நாமக்கல் மாவட்ட அளவில், மாணவியருக்கான தடகள போட்டி, நாளை, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரியில் நடக்கிறது' என, மாவட்ட தடகள சங்க தலைவர் சின்ராஜ், செய-லாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள போட்டி, நாளை, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரியில் நடக்கிறது. அதில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 2011 டிச., 21 முதல், 2013, டிச., 20க்குள் பிறந்த சிறுமியர் கலந்துகொள்ளலாம். 16 வயதுக்குட்-பட்டோர் பிரிவில், 2009 டிச., 21 முதல், 2011 டிச., 20க்குள் பிறந்த பெண் சிறுமியர் பங்கேற்கலாம். 14 வயதுக்குட்பட்ட சிறு-மியருக்கு, டிரையத்லான் பிரிவு ஏ, பி, சி மற்றும் கிட்ஸ் ஜாவலின் என, நான்கு போட்டிகளும், 16 வயதுக்குட்பட்ட சிறுமியருக்கு, 60 மீ., 600 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என, 7 போட்டிகள் நடக்கின்றன. விபரங்களுக்கு, மாவட்ட தடகள சங்க இணை செயலாளர் கார்த்தியை, 9444879213 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.