உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட அளவில் யோகா போட்டி: 350 பேர் பங்கேற்பு

மாவட்ட அளவில் யோகா போட்டி: 350 பேர் பங்கேற்பு

நாமக்கல், நாமக்கல் மாவட்ட யோகாசன சங்கம், சித்தர் கருவூரார் யோகா மையம், ஓம்ஸ் அகாடமி, தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து, மாநில யோகா போட்டிக்கு, நாமக்கல் மாவட்ட அணி தேர்வு, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட யோகாசன சங்க தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.பொருளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் வரவேற்றார். தொழில் அதிபர்கள் ஸ்கந்தகுமார், அபுபக்கர், ராஜேந்திரன் சின்னத்தம்பி ஆகியோர் யோகா போட்டியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.போட்டியில், 350-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சாம்பியன் ஆப் சாம்பியன் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. யோகாசன சங்க செயலாளர் ரவி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ