உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீபாவளி பண்டிகை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

நாமக்கல், நவ. 1-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகை, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருடபிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி, மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.அதேபோல் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி, காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து 11:00 மணிக்கு நல்லெண்ணெய், நெய், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை