உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது, லாட்டரி சீட்டு விற்பனை தி.மு.க., நிர்வாகி போராட்டம்

மது, லாட்டரி சீட்டு விற்பனை தி.மு.க., நிர்வாகி போராட்டம்

ப.வேலுார், ப.வேலுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 50; தி.மு.க., நகர துணை செயலாளர். இவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் உள்ள சாலையில் படுத்துக்கொண்டு, தி.மு.க., கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அப்போது, ப.வேலுாரில் உள்ள, இரண்டு டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக, 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையும் ஜோராக நடக்கிறது. இதை தடுக்க வேண்டிய உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார், கண்டும் காணாமல் உள்ளனர். நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டிக்கிறேன் என, கோஷமிட்டார்.அப்போது, பணியில் இருந்த போலீசார், சிவகுமாரை குண்டு கட்டாக துாக்கிக்கொண்டு ஸ்டேஷனுக்குள் சென்றனர். அங்கு சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த சிவகுமார், போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினார். இதையடுத்து, சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சிவகுமார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை