மேலும் செய்திகள்
தி.மு.க., பாக முகவர்ஆலோசனை கூட்டம்
25-Mar-2025
ப.வேலுார்: பரமத்தி வேலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ப.வேலுார் நகர தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. ப.வேலுார் தி.மு.க., நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அவர், ''வரும், 2026ல் நடக்க உள்ள தேர்-தலில், கட்சியினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும்; தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்,'' என பேசினார்.கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகில் பிரபாகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், ப.வேலுார் நகர தலைவர் மதிய-ழகன் உள்பட ஓட்டுச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
25-Mar-2025