உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., ஓட்டுச்சாவடிமுகவர்கள் கூட்டம்

தி.மு.க., ஓட்டுச்சாவடிமுகவர்கள் கூட்டம்

குமாரபாளையம்:குமாரபாளையம் நகர தி.மு.க., சார்பில் வடக்கு மற்றும் தெற்கு நகரங்களுக்கான ஓட்டுச்சாவடி முகவர்கள், வாக்காளர் சரிபார்ப்பு குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு பொறுப்பாளர் ஞானசேகரன், வடக்கு பொறுப்பாளர், நகராட்சி தலைவர் விஜயகண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.கூட்டத்தில், 500க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர் சரி பார்ப்பு குழுவினர் பங்கேற்றனர். இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, ஆலோசனைகளை வழங்கினார். தெற்கு மற்றும் வடக்கு நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ