போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி
திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், நேற்று போலீசார் சார்பில், 'போதை இல்லா தமிழகம்' விழிப்புணர்வு பேரணி நடந்தது. வாலரைகேட் ரவுண்டானா பகுதியில் இருந்து துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 'போதை அழிவுக்கான பாதை; போதை இல்லா தமிழகம்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை, மாணவ, மாணவியர் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.பேரணியில், 'பான் மசாலா, குட்கா போன்றவற்றை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது; இதை விற்பதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம்' என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வினியோகித்தனர். வாலரை கேட்பகுதியில் தொடங்கிய பேரணி, தாசில்தார் அலுவலகம் முன் நிறைவடைந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.