உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ.,வை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ.,வை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், இ.கம்யூ., கட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை அருகே, பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் சுகுமார் தலைமை வகித்தார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து, மாநில நிர்வாக குழு உறுப்பினர் மோகன், மாவட்ட செயலாளர் அன்புமணி ஆகியோர் விளக்கினர். டி.ஓ.பி.எம்., மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் தனசேகரன், விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், கட்டட சங்க மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை