| ADDED : நவ 25, 2025 01:34 AM
நாமக்கல்,:கொல்லிமலையில், அனுபவ நிலத்தில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை, வனத்துறையினர் பிடுங்கி எறிவதாக கூறி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். அதில், கொல்லிமலை தாலுகா, தேவனுார் நாடு, சூழவந்திப்பட்டி கிராமத்தில் வரகு, சாமை, திணை, உள்ளிட்ட சிறுதானியங்களை பல தலைமுறைகளாக பயிரிட்டு வந்த அனுபவ நிலத்தில், தற்போது சில்வர் ஓக் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம்.அதை பராமரிப்பு பணி மேற்கொள்வதாக அந்த சில்வர் ஓக் மரக்கன்றுகள் நடப்பட்டதை பிடுங்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபடும் வனத்துறையின் அத்துமீறலை நிறுத்தக்கோரியும், 2006-வன உரிமை சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.