உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளைம் நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம்

குமாரபாளைம் நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம்

குமாரபாளையம் :குமாரபாளையம் நகராட்சியில், நகர்மன்ற அவசர கூட்டம், தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணி மேற்கொள்ள, ஒப்பந்த புள்ளியில் குறைந்த தொகை நிர்ணயம் செய்த நிறுவனத்திற்கு பணிகள் வழங்க அனுமதி கொடுக்கலாம், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.துணைத்தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, ஜேம்ஸ், கதிரவன், சுமதி, கனகலட்சுமி, வள்ளியம்மாள், கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். அவர்கள், தங்கள் வார்டுகளில் வடிகால் அமைத்தல், வடிகால் துாய்மை செய்தல், குடிநீர் டேங்க், அமைத்தல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை