வி.ஏ.ஓ.,வை தாக்கிய விவசாயி 3 மாதங்களுக்கு பின் கைது
நாமக்கல்: ப.வேலுார் தாலுகா, கீரம்பூர் பிர்காவிற்கு உட்பட்ட நருவலுாரில், வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருபவர் ராமன். இவர் அக்., 4ல் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, அப்பகுதியை சேர்ந்த விவசாயி திருமுருகன் அகற்றினார். தகவலறிந்த நருவலுார் வி.ஏ.ஓ., ராமன் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம-டைந்த விவசாயி திருமுருகன், வி.ஏ.ஓ., ராமனை தாக்கியுள்ளார்.இதுகுறித்து புகார்படி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில், திருமுருகன் மீது வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், விவசாயி திருமுருகன் தலைமறை-வானார். அவரை உடனடியாக கைது செய்யக்கோரி வருவாய்த்-துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர்.அவரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, 5 நாட்கள் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, திருமுருகனை கைது செய்ய, 4 தனிப்படை அமைத்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார், 3 மாதமாக திருமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில், வி.ஏ.ஓ.,வை தாக்கிய வழக்கில், நல்லிபாளையம் போலீசார் விவசாயி திருமுருகனை கைது செய்தனர்.