நாமக்கல்: மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், 882 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. 'இத்திட்டத்தை அமைக்க கூடாது' என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், 'சிப்காட்' எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர், பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில், 'சிப்காட்' எதிர்ப்பு இயக்க ஒருங்கி-ணைப்பாளர்கள் ராம்குமார், ரவீந்திரன் உள்-ளிட்டோர் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்-தனர். தொடர்ந்து, 'சிப்காட்' எதிர்ப்பு இயக்க ஒருங்கி-ணைப்பாளர் ரவீந்திரன் கூறியதாவது:சிப்காட் திட்டம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட, 98 சதவீதம் பேர், ஏற்கனவே, நில நிர்வாக ஆணைய-ருக்கு, இரண்டு முறை ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளனர். இருந்தும், நில நிர்வாக ஆணையர் அனுப்பியதாக, வி.ஏ.ஓ., சம்பந்தப்-பட்ட விவசாயிகளிடம் கடிதம் கொடுத்து கையெ-ழுத்து வாங்கி வருகிறார். சில கடிதங்கள், வளை-யப்பட்டி தபால் நிலையத்தில் இருந்து பதிவு தபாலில் அனுப்புகிறார். இது, இப்பகுதி விவசாயி-களுக்கு மிகுந்த அச்சத்தையும், குழப்பதையும் ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தில் சீலும், கையெ-ழுத்தும் இல்லை. தமிழக முதல்வர் இது குறித்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும். தொடக்கத்தில் இருந்து மாவட்ட நிர்-வாகத்தை தாண்டி யாரோ செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அதனால், தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலி-யுறுத்தி, வரும் ஜன., 2 முதல், சாகும் வரை உண்-ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.