உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சமையல் செய்த போது தீ விபத்து இரு டூவீலர்கள் எரிந்து சேதம்

சமையல் செய்த போது தீ விபத்து இரு டூவீலர்கள் எரிந்து சேதம்

வெண்ணந்துார்:தோட்டத்து வீட்டில் சமையல் செய்த போது, ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த இரு டூவீலர்கள் எரிந்து சேதமானது. மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமானது தெரியவந்துள்ளது.வெண்ணந்துார் அருகே உள்ள அத்தனுார் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட உடுப்பத்தான் புதுார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சின்னதுரை. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. தோட்டத்து வீட்டில் நாமக்கல் டவுன் செல்லப்பா காலனியை சேர்ந்த மெய்யப்பன், இவரது மனைவி சரஸ்வதி குடியிருந்து வருகின்றனர். மெய்யப்பன் லாரி டிரைவர். சரஸ்வதி நேற்று மதியம் தோட்டத்து வீட்டில் சமையல் செய்த போது, தீ பிடித்தது. தீ மளமளவென பரவி வீட்டின் கூரை மீது பிடித்து எரிந்தது.ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டி.வி.எஸ்., எக்ஸ்.எல், பஜாஜ் பல்சர் உள்ளிட்ட மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.வெண்ணந்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி