மேலும் செய்திகள்
வாகனம் மோதி மூதாட்டி இறப்பு
18-Nov-2024
ப.வேலுார்: கந்தம்பாளையத்தில் நாட்டுக்கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2,000 கோழிகள் உயிரிழந்தன.நாமக்கல் மாவட்டம் ப.வேலுார், கந்தம்பாளையம் அருகே கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 58; விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், அருணகிரிபா-ளையம், ஊஞ்சல் காட்டு பகுதியில் உள்ளது. இங்கு நாட்டுக்-கோழி பண்ணை நடத்தி வருகிறார். மேலும், ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, விறகு அடுப்பை பற்ற வைத்து ஆடுகளுக்கு கூழ் காய்ச்சி உள்ளார். பின், அடுப்பில் இருந்த நெருப்பை அணைக்காமல் வெளியே சென்றுவிட்டார்.அப்போது, அதிக காற்று வீசியதால், அடுப்பில் இருந்து தீப்-பொறி பறந்து அருகில் இருந்த கோழிப்பண்ணையில் பற்றி எரிந்-தது. இதில், பண்ணைக்குள் இருந்த, 2,000 நாட்டுக்கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திருச்செங்கோடு தீயணைப்பு துறை-யினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Nov-2024