உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோனேரிப்பட்டி ஏரியில் தீ

கோனேரிப்பட்டி ஏரியில் தீ

ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சியை ஒட்டியே கோனேரிப்பட்டி ஏரி உள்ளது. பட்டணம், வடுகம், போதமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோனேரிப்பட்டி ஏரியில் தேங்கி நிற்கும். இதன் மூலம் சுற்று பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மட்டுமின்றி நகர் பகுதி மக்களுக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர, இந்த ஏரி காரணமாக உள்ளது. ஏரியில் முள் மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளன. கடந்த கொரோனா காலத்தில் இந்த மரங்களை வெட்டி எடுத்து சுத்தம் செய்தனர்.ஆனால், மீண்டும், 3 ஆண்டுகளில் மரங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. இவ்வழியாக செல்லும் ஆசாமிகள், சிகரெட்டை குடித்துவிட்டு அணைக்காமல் போடுவது உள்ளிட்ட காரணங்களால் ஏரியில் அடிக்கடி தீ பிடித்துக்கொள்கிறது. இந்த, 2 வாரங்களில் மூன்றாவது முறையாக, நேற்றும் தீப்பிடித்துக்கொண்டது. ஏரியின் மத்தியில் பிடித்த தீயால், காய்ந்த முள் மரங்கள் வேகமாக எரியத்தொடங்கின. ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்