உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலை அடிவார வனப்பகுதியில் தீ

கொல்லிமலை அடிவார வனப்பகுதியில் தீ

சேந்தமங்கலம்: கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான மூங்கில் மரங்கள் எரிந்து சாம்பலாகின.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இருந்து மலைக்கு செல்லும் வாகனங்களை, வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பி வருகின்றனர். இந்த அடிவாரத்தில் இருந்து, 15வது கொண்டை ஊசி வளைவு வரை அதிகளவில் மூங்கில் மரங்கள் உள்ளன. இந்த மூங்கில் மரங்கள், தற்போது அடிக்கும் வெயிலுக்கு காய்ந்துள்ளன.இதனால், நேற்று மதியம், 12:00 மணியளவில் சோதனைச்சாவடி அருகே வனத்துறையினருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென காடு முழுதும் பரவியது. இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து, 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ‍ஆனால், இரவு, 7:30 மணிக்கு மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அடிவாரத்தில் இருந்து, 2வது கொண்டை ஊசி வளைவுவரை தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், கொல்லிமலையில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தால் ஏராளமான மூங்கில் மரங்கள் எரிந்து சாம்பலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி