உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீ மிதி விழா கோலாகலம்

தீ மிதி விழா கோலாகலம்

எருமப்பட்டி:எருமப்பட்டி டவுன் பஞ்., பழனி நகரில் பிரசித்தி பெற்ற மகா மாரிம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை மாத திருவிழா, கடந்த, 6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா, நேற்று மாலை நடந்தது. விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள், 400க்கும் மேற்பட்டோர் சந்தைப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின், மாக மாரியம்மன் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை