உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூக்களின் விலை கடும் சரிவு பயிரிட்ட விவசாயிகள் கவலை

பூக்களின் விலை கடும் சரிவு பயிரிட்ட விவசாயிகள் கவலை

ப.வேலுார், சுப முகூர்த்த நாட்கள் முடிவடைந்ததால், பூக்களின் விலை பாதியாக குறைந்தது.ப.வேலுார், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டு மல்லி, சம்பங்கி, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தினமும் பூக்களை அறுவடை செய்து, ப.வேலுார் பூக்கள் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ஏலம் முறையில் பூக்களை வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர். கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி சமயங்களின்போது, பூக்கள் விலை உச்சத்தில் இருப்பது வாடிக்கை. மற்ற காலங்களில் அதன் விலை குறைந்து காணப்படும். நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் விலை சரிவடைந்தது. இது, விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது. கடந்த வாரம், 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டு மல்லி, நேற்று, 300 ரூபாய்க்கு விற்பனையானது. 150 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி, 60 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !