| ADDED : டிச 08, 2025 08:58 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், சிங்கிலியம்கோம்பை பகுதியில் நாரைக்கிணறு, மத்துருட்டு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நாரைக்கிணறு நிலவரி திட்டத்தின் கீழ், 105 விவசாயிகளுக்கு, 11.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 113 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை விவசாயிகளுக்கு வழங்கினர். தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, உரம்பு பகுதியில் கபடி, ஓட்டப்பந்தயம், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கேடயம், பரிசுகளை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் வழங்கினர். உடன் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.