24ல் ஒருங்கிணைந்த பண்ணை முறை மீன் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்
24ல் ஒருங்கிணைந்த பண்ணை முறைமீன் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்நாமக்கல், அக். 16-'வரும், 24ல் ஒருங்கிணைந்த பண்ணை முறையில், மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 24 காலை, 10:00 மணிக்கு, 'ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.பயிற்சியில், மீன் பண்ணை குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், கோழி, வாத்து குடில் அமைத்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை, மண் மற்றும் நீர்வள தரம் அறிதல், மீன்வள துறையில் உள்ள மீன் வளர்ப்பிற்கேற்ற தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது.மேலும், செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படுகிறது. மாநில, மத்திய அரசாங்கத்தின் மீன் வளர்ப்புக்குள்ள மானியம் குறித்து தகவல் அளிக்கப்படும். இப்பயிற்சியில், வேலையில்லாத பட்டதாரிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையாளர்கள், இளைஞர்கள், முதுநிலை கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளவர்கள், 04286-266345, 266650, 73585-94841 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.