உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கேலோ இந்தியா விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கேலோ இந்தியா விளையாட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாமக்கல்: 'கேலோ இந்தியா' விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, நேற்று நடந்தது. சென்னையில், 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டி ஜன., 19 முதல் 31- வரை நடக்கிறது. இதையொட்டி, விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசார வாகனம் மாவட்ட வாரியாக சென்று வருகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாரத்தான் போட்டியும் நடந்து வருகிறது.அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று மினி மாரத்தான் போட்டி நடந்தது. கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 10 முதல், 70 வயது வரையிலான ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொண்டனர். 5 கி.மீ., துாரம் சென்று, மீண்டும் திரும்பும் வகையில் நடந்த இந்த மாரத்தான் போட்டியில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியை சேர்ந்த மாணவர் மோகன் முதலிடம் பிடித்தார். முதல், 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை