உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சேலம், கோரிமேட்டில் உள்ள அரசினர் தொழிற்-பயிற்சி நிலையம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்ட கிளை தலைவர் முருகப்பெருமாள் தலைமை வகித்தார். அதில் புது ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தல்; முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்குதல்; அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தினர். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொழி-லாளர் நல அலுவலகம் முன்பும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வட்ட கிளை தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடந்தது. அதில் அரசு அலுவலரின் பணிப்பளுவை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்-தினர்.மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் நில அளவை பிரிவு மாநில செயலர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர், கிராம உதவியாளர் உள்பட, 3 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோஷம் எழுப்பினர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் கருப்பண்ணன், வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட கிளை தலைவர் பிரபாகரன், துணை தலைவர் வெற்றிவேல் உள்-பட பலர் பங்கேற்றனர். ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்க நிர்வாகி கலைவாணன் அந்தோனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ஓமலுார் தாசில்தார் அலுவலகம், காடையாம்பட்டி தாசில்தார், பி.டி.ஓ., அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி