மோகனுார்,நாமக்கல், மோகனுார் எஸ்.வாழவந்தியை சேர்ந்த நாகராஜ்-சித்ரா தம்பதியின் மகன் சபரி, 16; பாலப்பட்டி அரசு பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். இவர் கபடி போட்டியில், மாவட்ட அளவிலான பயிற்சி முகாமில் திறமையை வெளிப்படுத்தியதால் தேர்வு செய்யப்பட்டார்.தொடர்ந்து, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வி.பி.கே.சி., ஸ்போர்ட்ஸ் அகாடமியில், கடந்த, 7 முதல், 23 வரை நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்றார். அதில், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். வரும், 27 முதல், 30 வரை, ஹரியானாவில் நடக்க உள்ள, 35வது தேசிய சப்- ஜூனியர் சிறுவர் கபடி போட்டிக்கு, நாமக்கல் மாவட்டத்திலிருந்து, தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழக அணியுடன் ஹரியானா புறப்பட்டு சென்றார். தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவரை, தலைமையாசிரியர் மெகருன்னிசா, ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.