உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீஸ் ஸ்டேஷனில் மனு குறைதீர் முகாம்

போலீஸ் ஸ்டேஷனில் மனு குறைதீர் முகாம்

ப.வேலுார்: --ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்களின் மனுக்கள் மீதான குறைதீர் முகாம், நேற்று நடந்தது. டி.எஸ்.பி., சங்கீதா தலைமை வகித்தார். ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, முகாமை நடத்தினார். அதில், குடும்ப பிரச்னை, இடப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டன. 46 புகார் மனுக்கள் பெறப்பட்டு, 31 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 15 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், வயதானோர் அளித்த புகார் மனு அடிப்ப-டையில் நேரடியாக சென்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன. முகாமில், எஸ்.ஐ.,க்கள் அய்யாகண்ணு குமார், ஜீவிதா, கோபால், சுப்பிரமணி மற்றும் போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை