உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீசார் மீது தாக்குதல் வாலிபர் மீது குண்டாஸ்

போலீசார் மீது தாக்குதல் வாலிபர் மீது குண்டாஸ்

நாமக்கல், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கொசவம்பட்டி பகுதியில், எஸ்.ஐ., செட்டியண்ணன் மற்றும் போலீஸ்காரர் ராஜ்மோகன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், பணியில் இருந்த எஸ்.ஐ., மற்றும் போலீசாரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட, கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தை சேர்ந்த ராஜி மகன் விஜய், 26, என்பவரை, குண்டாசில் கைது செய்ய, நாமக்கல் எஸ்.பி., விமலா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் துர்கா மூர்த்தி, விஜயை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதற்கான நகலை, சேலம் மத்திய சிறையில் உள்ள விஜயிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி