உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மோகனுார் பகுதியில் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தில் ஒரே நாளில் 249 மி.மீ., பதிவு

மோகனுார் பகுதியில் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தில் ஒரே நாளில் 249 மி.மீ., பதிவு

நாமக்கல்,: மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம், 249 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மோகனுாரில், 40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை, பகல், இரவு என, மாறி மாறி பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நாமக்கல், மோகனுார், பள்ளிப்பாளையம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில், ஒரு சில இடங்களில் கனமழையும், பல்வேறு பகுதிகளில், லேசான மழையும் பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். தொடர்ந்து இரவிலும் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. குறிப்பாக, மோகனுார், நாமக்கல், ப.வேலுார், ராசிபுரம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில், அதிகளவில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக, விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று முன்தினம் காலை, 6:00 மணி முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம் பெய்த மழையளவு, மி.மீ., பின்வருமாறு: எருமப்பட்டி, 25, குமாரபாளையம், 12.80, மங்களபுரம், 27.80, மோகனுார், 40, நாமக்கல், 29, ப.வேலுார், 28, புதுச்சத்திரம், 6, ராசிபுரம், 28, சேந்தமங்கலம், 12.40, திருச்செங்கோடு, 10, கலெக்டர் அலுவலகம், 9, கொல்லிமலை, 21 என, மொத்தம், 249 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை