உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்

லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்

நாமக்கல் : பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. இதில், நாமக்கல் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்ஷினி, 600க்கு, 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவர், தமிழ், 97, ஆங்கிலம், 92, இயற்பியல், 100, வேதியியல், ௯௯, உயிரியல், ௧௦௦, கணிதம், ௧௦௦ மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் தேவ் ஆனந்த், 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் ஷரத்பாபு, 577 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம் பிடித்துள்ளனர். மேலும், ௫௫௦க்கு மேல், ௨௫, ௫௦௦க்கு, மேல், ௭௫ பேர் பெற்றுள்ளனர்.பாடவாரியாக முதல் மதிப்பெண், தமிழ் -௧௦௦, ஆங்கிலம் -௯௬, இயற்பியல் - ௧௦௦ (௨ பேர்), வேதியியல் - ௧௦௦ (௧ பேர்), உயிரியல் - ௧௦௦ (௧ பேர்), கணிதம் - ௧௦௦ (௪ பேர்) மற்றும் கணினி அறிவியல் - ௧௦௦ (௧௧ பேர்), வணிகவியல் -௧௦௦ (௩ பேர்) கணக்குபதிவியல் - ௧௦௦ (௧ பேர்)முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை, பள்ளியின் தலைவர் வெங்கடாசலம், சால்வை அணிவித்து வாழ்த்தினார். தொடர்ந்து, செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கணேசன், இயக்குனர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர். பிளஸ் ௧ சேர்க்கையில், ௧௦ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. சேர்க்கை விபரங்களுக்கு, 8220052961, 8220052966 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்