மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான செஸ் பங்கேற்க அழைப்பு
23-Dec-2024
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துாரை அடுத்த அக்கரைப்பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் மனைவி லலிதா, 42; தம்ப-திக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஒரு வாரத்துக்கு முன் வயிற்று வலியால், ராசிபுரத்தில் ஆத்துார் பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லலிதா சிகிச்சைக்கு சேர்ந்தார். மருத்துவ பரிசோதனையில் கர்ப்பப்பையை அகற்றுமாறு கூறியுள்-ளனர். சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்த செங்கோட்டையன், தன்னு-டைய குடும்பத்திற்கு, 'ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' பாலிசி இருப்பதாக கூறி, மருத்துவமனையில் உள்ள இன்சூரன்ஸ் பிரிவை அணுகியுள்ளார். ஆப்பரேஷனுக்கு, 1.3௦ லட்சம் ரூபாய் செலவாகும். பாலிசி கிளைம் கிடைக்க தாமதமாகலாம். அல்லது ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும். எனவே முதல்கட்டமாக, 50,000 ரூபாய் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி-யுள்ளனர். இதையடுத்து, 50,000 ரூபாயை செலுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆப்ரேஷன் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லலி-தாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாமா என கேட்டுள்ளனர். காப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை எனக்-கூறி அனுப்ப மறுத்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்-றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்சூரன்ஸ் பணம் கிளைம் ஆகவில்லை என்றால், மீதி தொகையை செலுத்த செங்-கோட்டையன் சம்மதித்தார். இதையடுத்து நோயாளியை வீட்-டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மருத்துவமனை சாலையில், நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
23-Dec-2024