உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் கையெழுத்து பயிற்சி வகுப்பு துவக்க விழா

அரசு பள்ளியில் கையெழுத்து பயிற்சி வகுப்பு துவக்க விழா

நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ரோட்-டரி பவுல்டரி சங்கம் சார்பில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சு பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஸ் மற்றும் கையெழுத்து பயிற்சி வகுப்பு துவக்க விழா, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். நாமக்கல் பவுல்டரி ரோட்டரி சங்க தலைவர் பிரபாகரன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு விளையாட்டு உபக-ரணங்கள், அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்-பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பேச்சு மற்றும் எழுத்து பயிற்சி அளிப்பதற்காக, ரோட்டரி சங்கம் மூலம், ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை