உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடக்கம்

நாமக்கல்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மத்திய காப்பறையில், நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டத்தில், 2,433 கட்டுப்பாட்டு கருவிகள், 5,779 ஓட்டுப்பதிவு கருவிகள் மற்றும் 2,590 ஓட்டுப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் என மொத்தம், 10,802 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 9 இன்ஜினியர்கள் தர்லோக் சிங் என்பவர் தலைமையில் உட்படுத்தப்படவுள்ளது.மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரன் மேற்பார்வையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அனைத்து இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்த்தல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிக்கு 3 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள் உள்பட 90 பேர் ஈடுபடுவர். இப்பணி நேற்று தொடங்கப்பட்டு, அனைத்து இயந்திரங்களும் சரிபார்த்து முடிக்கும் வரை, 22 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். சரியாக உள்ள இயந்திரங்கள், தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை