உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முனியப்பன் கோவிலில் நகை, பணம் திருட்டு

முனியப்பன் கோவிலில் நகை, பணம் திருட்டு

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டுவலசு, நல்லாம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஏரி முனியப்பன் கோவில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த அல்லிமுத்து, 35, என்பவர், இரவு வேளையில் விளக்குகளை எரியவிட்டும், பகலில் விளக்குகளை அணைத்தும் வந்துள்ளார். இரவில் விளக்குகளை எரியவிட்டு சென்றவர், பகலில் விளக்குகளை அணைக்க, நேற்று முன்தினம் காலை, 7:00 மணியளவில் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, கோவில் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பார்த்த போது, 3 அண்டா, ஒரு பவுன் நகை, உண்டியல் பணம், காஸ் சிலிண்டர் ஆகியவை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ