மேலும் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'
20-Jun-2025
சேந்தமங்கலம், கொல்லிமலை, வளப்பூர்நாடு பகுதியை சேர்ந்தவர் காசிநாதன், 23; கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார்படி, காசிநாதன் மீது வழக்குப்பதிவு செய்து வாழவந்தி நாடு போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், ராசிபுரத்தில், மாணவியுடன் வந்த காசிநாதனை கைது செய்த போலீசார், நாமக்கல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.இதையடுத்து, மகளிர் போலீசார் காசிநாதன் மீது போக்சோ வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
20-Jun-2025