உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் அரசு பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்

குமாரபாளையம் அரசு பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அசத்தல்

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில், 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், 488 மதிப்பெண், 2 பேர் பெற்று, 2ம் இடம், 485 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்த சாதனை படைத்தனர். கணிதம், 7 பேர், அறிவியல், 1, சமூக அறிவியல், 3 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 244 பேர் தேர்வெழுதியதில், 235 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்த மாணவன் அகஸ்தீஸ்வரன், 487 மதிப்பெண் பெற்று முதலிடம், மணிமாறன், 485 மதிப்பெண் பெற்று, 2ம் இடம், மோஹித் பீனிக்ஸ், 484 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர். கணிதம், 6 பேர், அறிவியல், 1 என, 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். தேர்வு எழுதிய, 261 மாணவர்களில், 233 பேர் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர் ஆடலரசு பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை