உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டு மல்லி கிலோ ரூ.1,000க்கு உயர்ந்தது

குண்டு மல்லி கிலோ ரூ.1,000க்கு உயர்ந்தது

குண்டு மல்லி கிலோ ரூ.1,000க்கு உயர்ந்தது எருமப்பட்டி, நவ. 8-எருமப்பட்டி யூனியனில், ஏராளமான விவசாயிகள் குண்டு மல்லிகை பூக்கள் பயிரிட்டுள்ளனர். அதிக வாசனை உள்ள இந்த பூக்களுக்கு, வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால், விசேஷ நாட்களில் அதிகளவில் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், தொடர் முகூர்த்த தினம் என்பதால், நேற்று முன்தினம், 800 ரூபாய்க்கு விற்ற குண்டுமல்லி பூக்கள் நேற்று, 200 ரூபாய் உயர்ந்து, 1,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லை பூ கிலோ, 800, அரளி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ