மேலும் செய்திகள்
முத்துமாரியம்மன், காளியம்மன் தேர் திருவிழா
04-May-2025
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் பிரசித்தி-பெற்ற கக்குவான் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்-கோவிலில் திருவிழா, கடந்த, 16ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி-யது. நேற்று காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்-டது. 10:00 மணிக்கு மேல் முப்போடு அழைத்தல், முளைப்பாரி அழைத்தல், பெரும்பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. அம்மன், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்-தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வா-கிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
04-May-2025