உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பலியான லாரி டிரைவர் குடும்பத்திற்கு எம்.பி., ஆறுதல்

பலியான லாரி டிரைவர் குடும்பத்திற்கு எம்.பி., ஆறுதல்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், தாத்தையங்கார்பட்டியை சேர்ந்தவர் சின்-னண்ணன், 54; லாரி டிரைவர். இவர், எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரியை, கர்நாடகா மாநிலத்திற்கு ஓட்டிச் சென்றார். அங்கு, கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சிரூர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளத்தில் டேங்கர் லாரி அடித்துச் செல்லப்பட்டது. இதில், லாரியுடன் டிரைவர் சின்-னண்ணன் உயிரிழந்தார். மேலும், இரண்டு டிரைவர்களை தேடி வருகின்றனர். இந்நி-லையில், உயிரிழந்த சின்னண்ணனின் வீட்டிற்கு நேற்று சென்ற, எம்.பி., மாதேஸ்வரன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்