உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போலீசாருக்கு எம்.பி., ஆறுதல்

போலீசாருக்கு எம்.பி., ஆறுதல்

நாமக்கல்: கேரளா மாநிலம், திருச்சூரில் கடந்த, 27ல், ஏ.டி.எம்.,களில் கொள்-ளையடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் தப்பிய, ஹரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பலை, பள்ளிப்பாளையம் அடுத்த வெப்ப-டையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அப்போது கொள்ளையர்கள், போலீசாரை தாக்கியதில் காயமடைந்த இன்ஸ்-பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் ஆகியோர், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர் உமா, எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு நேரில் சென்று காயமடைந்த போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினர். நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், அரசுத்-துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ