உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏரிகளில் குப்பை கொட்ட தடை: நகராட்சி எச்சரிக்கை

ஏரிகளில் குப்பை கொட்ட தடை: நகராட்சி எச்சரிக்கை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் ஆத்துார் சாலையில் கோனேரிப்பட்டி ஏரியும்; சேலம் சாலையில் ராசிபுரம் ஏரியும்; நாமக்கல் சாலையில் இருந்து சிறிது துாரத்தில் அணைப்பாளையம் ஏரியும்; பஸ் ஸ்டாண்ட் பின்பு தட்டாங்குட்டை ஏரியும் அமைந்துள்ளது. ராசிபுரம் சுற்றியுள்ள ஏரிகளில் அந்தந்த பகுதி மக்கள் குப்பை-களை கொட்டி வருகின்றனர். முக்கியமாக கறிக்கடை, கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகளை அதிகம் கொட்டியுள்ளனர். கடந்த வாரம், ராசிபுரம் ஏரியில் மருந்து மாத்திரை உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஏரியில் குப்-பைகளை கொட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்ச-ரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கை பலகை அனைத்து ஏரிக்-கரையோரங்களிலும், முக்கியமாக குப்பை கொட்டும் இடத்தில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி