உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கிழக்கு மாவட்டதி.மு.க., செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்டதி.மு.க., செயற்குழு கூட்டம்

நாமக்கல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (21ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு நாமக்கல் மோகனுார் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், பொறுப்பாளர், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதில் வரும், 27ம் தேதியன்று துணை முதல்வர் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ