உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / படிப்பை நிறுத்தியவருக்குஇலவச தொழிற்பயிற்சி

படிப்பை நிறுத்தியவருக்குஇலவச தொழிற்பயிற்சி

நாமக்கல்: 'பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என, கல்லூரி முதல்வர் லிங்கம்மாள் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், இலவச சமுதாய தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி, திடக்கழிவு மேலாண்மையில் மண்புழு வளர்ப்பு, உயிர் உரம் தயாரிக்கும் முறை, காளான் வளர்ப்பு, வினியோகம், தையல் மற்றும் நவீன உடை தயாரிப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.இப்பயிற்சியில், பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மட்டும் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சிக்கென வயது வரம்பு எதுவும் இல்லை. பயிற்சிகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு பெரியார் பல்கலை மூலம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வங்கிக் கடன் பெறுவதற்கும் இச்சான்றிதழ் உதவும். பயிற்சி குறித்து மேலும் தகவல் அறிய, 99432-15887, 98652-84914 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை