உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முறையாக நடக்காத நகராட்சி கூட்டம்வார்டு கவுன்சிலர்கள் கலக்கம்

முறையாக நடக்காத நகராட்சி கூட்டம்வார்டு கவுன்சிலர்கள் கலக்கம்

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில், தற்போதைய நிலவரப்படி சேர்மன், துணைத் சேர்மன் உட்பட, 30 கவுன்சிலர்கள் உள்ளனர். வார்டு கவுன்சிலர்கள், தங்களது வார்டு பிரச்னைகள் குறித்து, ஒவ்வொரு மாதமும் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்து, அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.தவிர, நகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த விவாதமும் கவுன்சில் கூட்டத்தில் நடக்கும். தேவையற்ற திட்டப் பணிகளை, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்படும், எதிர்ப்பு மூலம் நிறுத்தி வைக்க முடியும். இதுபோன்ற காரணங்களால், பெரும்பாலான கவுன்சிலர்கள், நகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்பர்.மாதந்தோறும் கவுன்சில் கூட்டம் நடத்த வேண்டும். தவிர்க்க இயலாத காரணம் இருந்தால், மூன்று மாதத்துக்கு ஒருமுறை கவுன்சில் கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. இதைக் காரணமாக வைத்து, மாதந்தோறும் நடக்க வேண்டிய நாமக்கல் நகராட்சிக் கூட்டம், மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தது.நான்காவது மாதவாது கவுன்சில் கூட்டம் நடக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் கவுனசிலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். நான்காவது மாதம் கவுன்சில் கூட்டம் நடந்தது போல், மினிட் புத்தக்கத்தில் அந்த கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கப்படும் என, புகார் தெரிவிக்கப்படுகிறது.முறையாக கவுன்சில் கூட்டம் நடக்காததால், வார்டு பிரச்னை குறித்து வாய் திறந்து தெரிவிக்க இயலாத கவுன்சிலர்கள், மீண்டும் தேர்தலில் போட்டியிட தயங்கும் சூழல் உருவாகியுள்ளது.இதுகுறித்து நகராட்சிக் கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:நகராட்சிக் கவுன்சில் கூட்டம், மாதந்தோறும் நடத்த வேண்டும். தேர்தல் போன்ற தவிர்க்க இயலாத காரணங்களினால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும். நாமக்கல் நகராட்சியில் இதற்கு நேர்மாறாக கவுன்சில் கூட்டம் நடத்தப்படும்.கூட்டம் நடந்தது போல் கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். ஒரு சில கவுன்சிலர்கள் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர். ஆனால், அவர்களும் சேர்மன் மூலம் 'சரி'கட்டப்படுவர். கூட்டம் நடந்தால் பிரச்னை வரும் எனத் தெரிந்தால், கூட்டம் நடத்தமாட்டர்.கடைசி மாதான செப்டம்பர் வரை, கவுன்சில் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால், கூட்டம் நடந்தது போல் ஆவணங்கள் இருக்கும். சேர்மன் செல்வராஜின் இந்நடவடிக்கையால், வார்டுகளில் பல பணிகள் முடங்கியுள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை