உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.ஜி.பி., கல்லூரியில்வாழ்வியல் திறன் பயிற்சி

பி.ஜி.பி., கல்லூரியில்வாழ்வியல் திறன் பயிற்சி

நாமக்கல்:நாமக்கல் பி.ஜி.பி., கலை, அறிவியல் கல்லூரியில், ரெட் ரிப்பன் கிளப் சார்பில் வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நடந்தது.கல்லூரி முதல்வர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணை முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் காந்திமதி வரவேற்றார். கல்வி நிறுவன தாளாளர் கணபதி பயிற்சியை துவக்கி வைத்துப் பேசினார்.நாமக்கல் மாவட்ட ரெட் ரிப்பன் கிளப் ஒரங்கிணைப்பாளர் சாந்தாராம் பங்கேற்று ஹெச்.ஐ.வி., மற்றும் ஏ.ஆர்.டி., நம்பிக்கை மையம், சமூக நல மையம், பால்வினை நோய், ரத்தான முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசினார். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ