உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிலக்கடலையில்அதிக மகசூல்பெற யோசனை

நிலக்கடலையில்அதிக மகசூல்பெற யோசனை

நாமக்கல்: 'நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும்' என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும். ஜிப்சம் இடுவதால், வயலில் உள்ள மண் இலகுவாகி விழுதுகள் எளிதாக தலத்தில் பதிந்து காயாக உருவாகும். அவ்வாறு உருவாகும் காய்கள் ஒரே சீராக முதிர்ச்சி அடைந்து பொக்கு இல்லாத திரட்சியான நல்ல எடையுள்ள காய்கள் கிடைக்கும். அதனால், 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.ஜிப்சத்தில் உள்ள கந்தகச் சத்து நிலக்கடலை பயிருக்கு, இரண்டாம் நிலை ஊட்டச் சத்தாக இருப்பதுடன் காய்களில் உள்ள பருப்பின் எண்ணெய் சத்து சதவீதத்தை அதிகப்படுத்துகிறது. திரட்சியான காய்கள், அதிக விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.மனாவாரி நிலக்கடலைக்கு, ஜிப்சத்தை அடியுரமாக ஏக்கருக்கு, 80 கிலோ இட வேண்டும். விதைத்து, 45 நாள் கழித்து விழுது இறங்கும் பருவதத்தில், 80 கிலோ ஜிப்சத்தை மீண்டும் இட்டு மண் அணைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ