உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிவில் இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் மோசடிமாஜி எம்.எல்.ஏ., மீது எஸ்.பி.,யிடம் புகார்

சிவில் இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் மோசடிமாஜி எம்.எல்.ஏ., மீது எஸ்.பி.,யிடம் புகார்

நாமக்கல்: 'கான்ட்ராக்டர் பணி தருவதாகக் கூறி, பத்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த, முன்னாள் எம்.எல்.ஏ.,, அவரது மகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ராசிபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர், மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமாரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நான், கடந்த 13 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்து யூனியன் மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இடங்களில், கட்டிட கான்ட்ராக்டர் வேலையில் ஈடுபட்டு வருகின்றேன். கடந்த 1996-2001, 2001-06 வரை நாமகிரிப்பேட்டை யூனியன் சேர்மனாகவும், எம்.எல்.ஏ.,வுமாகவும் இருந்த தி.மு.க.,வை சேர்ந்த ராமசுவாமி, கடந்த 2007ம் ஆண்டு, என்னிடம், எம்.எல்.ஏ., நிதியில் வரும் கட்டிட கான்ட்ராக்ட் வேலைகளை தருவதாகக் கூறி, பத்து லட்சம் ரூபாய் கேட்டார். நான், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடனாக வாங்கி, பத்து லட்சம் ரூபாய் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, அவரது மகன் முத்துவேல் ஆகியோரிடம் கொடுத்தேன்.ஆனால், கான்ட்ராக் பணிகளை எனக்கு வழங்காமல், 10 முதல் 15 சதவீதம் வரை கமிஷனாக பெற்றுக்கொண்டு மற்ற சிவில் கான்ட்ராக்டர்களுக்கு வழங்கி வந்தார். இது குறித்து நேரில் சென்று கேட்ட போது, நான்கு லட்சம் ரூபாய்க்கான செக் எழுதி கொடுத்தனர். அதை, வங்கியில் கலெக்ஷனுக்கு போடவேண்டாம், மொத்தமாக பத்து லட்சம் ரூபாய் தந்துவிடுவதாகக் கூறினர். இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, அவரது மகன் முத்துவேல் நடத்தும் கல்லூரிக்கு சென்று, 'கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள்' எனக் கேட்டேன்.அப்போது, பணத்தை திருப்பி தர முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து, தொலைபேசியிலும் கொலை மிரட்டல் விடுத்தனர்.ஆகவே, மோசடி செய்து முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, அவரது மகன் முத்துவேல் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ