உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொங்கு நாடு மெட்ரிக் பள்ளிபசுமை தினம் கொண்டாட்டம்

கொங்கு நாடு மெட்ரிக் பள்ளிபசுமை தினம் கொண்டாட்டம்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பசுமை தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி முதல்வர் பிரேம்தாஸ் தலைமை வகித்தார். ஆலோசகர் ராஜன் முன்னிலை வகித்தார். கே.ஜி., குழந்தைகளுக்கு இயற்கையை பேணிக்காப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், பச்சை நிறத்தை அறிமுகம் செய்யும் விதத்திலும், அவர்களின் பேச்சு திறனை வளர்ப்பதன் ஒரு பகுதியாக, பச்சை தினம் கொண்டாடப்பட்டது.குழந்தைகள் அனைவரும் பச்சை நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். இலை, தழை, வாழை, தென்னங்கீற்று, பனை ஓலை மற்றும் பச்சை நிற காய்கறிகளால் வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காய்கறிகளை கொண்டு கோலங்கள் வரையப்பட்டிருந்திருந்தது.விழாவில், குழந்தைகள் பசுந்தழைகளை போர்த்திய ஆதிவாசிகளின் நடனமும், பசுமை ஆடைகளின் அணி வகுப்பும் பார்வையாளர்களை வெகுவாய் கவர்ந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுலோச்சனா, அருள்மணி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ