உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் நகராட்சியைஎட்டிப்பார்க்காத பா.ம.க.,

நாமக்கல் நகராட்சியைஎட்டிப்பார்க்காத பா.ம.க.,

நாமக்கல்: நாமக்கல் நகராட்சி சேர்மன், கவுன்சிலர் பதவியிடங்களுக்கு பா.ம.க., சார்பில் ஒருவர் கூட போட்டியிடவில்லை. வேட்பாளர் கிடைக்காததே இதற்கான காரணம் என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.நாமக்கல் நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.அதுபோல், நகராட்சியில், 39 வார்டுகளிலும் மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர் என மொத்தம், 313 பேர் களத்தில் உள்ளனர். ஆனால், நகராட்சி சேர்மன், கவுன்சிலர் உள்ளிட்ட எந்த பதவிக்கும், பா.ம.க., சார்பில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் கிடைக்காததே, யாரும் மனுதாக்கல் செய்யாததற்கு காரணம் என, மாவட்டத்தில் உள்ள பா.ம.க.,வினர் தெரிவித்தனர். அதே நேரத்தில், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நகராட்சியில், பா.ம.க., சார்பில் சேர்மன், கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை