உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளேடால் கிழித்து இருவர் படுகாயம்

பிளேடால் கிழித்து இருவர் படுகாயம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், பிளேடால் கிழித்து இருவர் படுகாயமடைந்தனர்.சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (26). அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.அதில் ஆத்திரமடைந்த இருவரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பிளேடால் கிழித்துக்கொண்டனர். அதில் படுகாயமடைந்த இருவரும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை