உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் சிலவரி செய்திகள்

நாமக்கல் சிலவரி செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினம்50 மரக்கன்றுகள் நடவுநாமக்கல்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல்லில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.நாமக்கல் நகராட்சி, பசுமை தமிழகம் மற்றும் ஈஷா இணைந்து, நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில், நகராட்சி, 35வது வார்டு இந்திரா நகர் பூங்காவில், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் சண்முகம், நகர் நல அலுவலர் கஸ்துாரி பாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெரியண்ணன், ஆசிரியர் சுமதி, வி.ஏ.ஓ., தமிழரசி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.குட்கா விற்பனைபெட்டி கடைக்கு 'சீல்' பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஒரு சில தவிர, பெரும்பாலான பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாலை, பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஐந்துபனை பகுதியில் உள்ள ராமு என்பவரின் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெட்டிக் கடையை பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டு, 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தும் செல்வம் என்பவர் கடையில், 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக, உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை