உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராமாபுரம் பஞ்.,ல் பல லட்சம் மோசடி அக்., 2ல் து. தலைவர் உண்ணாவிரதம்

ராமாபுரம் பஞ்.,ல் பல லட்சம் மோசடி அக்., 2ல் து. தலைவர் உண்ணாவிரதம்

திருச்செங்கோடு: 'பஞ்சாயத்து நிதியை கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி உதவியாளர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த பி.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அக்டோபர் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக' ராமாபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் சண்முகம், ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திர் யூனியன் ராமாபுரம் பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சரஸ்வதி இருந்து வருகிறார். ராமாபுரம் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்க, 2.50 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியது. எந்த இடத்திலும் விளையாட்டு மைதானம் அமைக்காமல், அந்த தொகையை கையாடல் செய்துள்ளனர். பஞ்சாயத்தில் டேங்க் ஆப்ரேட்டர் வேலையே செய்யாமல், உதவியாளர் தனது அதிகாரித்தை பயன்படுத்தி, மனைவி ரத்தினம் பெயரில் சம்பளமாக மாதம் தோறும் 2,000 ரூபாய் வீதம் நிதியில் இருந்து மோசடி செய்துள்ளார். தனிநபர் கழிப்பிடம் அமைத்ததற்காக, அரசு வழங்கிய மானியத்தை பயனாளிகளுக்கு வழங்காமல், பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள பஞ்சாயத்து தலைவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த ஊராட்சி எழுத்தர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பஞ்., தலைவர் செய்துள்ள ஊழல்களை பற்றியும், பஞ்சாயத்து உதவியாளர் பெரியசாமி அரசு பணத்தை கையாடல் செய்தது குறித்தும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர், பி.டி.ஓ., ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை